யாழ்ப்பாணத் திரைப்படக் கழகத்தின் 17 ஆவது திரையிடல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (25.10.2025) மாலை-03.30 மணியளவில் அம்மன் வீதி, யாழ் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் நடைபெறும்.
மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு "விராகய" (பற்றற்ற வாழ்க்கை) என்ற பெயரில் எடுக்கப்பட்ட குறித்த சிங்களத் திரைப்படத்தை திஸ்ஸ அபயசேகர நெறிப்படுத்தியுள்ளார். ஆங்கிலத் துணைத் தலைப்புடன் காண்பிக்கவிருக்கும் இத் திரைப்படம் 1987 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்தது.
இதேவேளை, இந் நிகழ்வுக்கான அனுமதி முற்றிலும் இலவசமெனவும், ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

