யாழ்.பல்கலைக்கழகத்தில் புலமைத்துவக் கலந்துரையாடல்

அரசகரும மொழிகள் திணைக்களம், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழியின் வரலாற்று முக்கியத்துவமும் கலாசாரப் பெறுமதியும் எனும் தொனிப் பொருளிலான புலமைத்துவக் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (25.10.2025) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், அரசகரும மொழிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் தகைசார் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். 

புலமைத்துவக் கலந்துரையாடல் அமர்வில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி.சி.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ், உறுகுணைப் பல்கலைக்கழக சிங்களத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.தம்மிக்க ஜயசிங்க, இளம் பேச்சாளர் ஜீவா சஜீவன் ஆகியோர் உரையாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.