தேசிய வாசிப்பு மாத நூலக தினமும் இந்துநாதம் சஞ்சிகை வெளியீடும்

இணுவில் இந்துக் கல்லூரியின் தேசிய வாசிப்பு மாத நூலக தினமும் இந்து நாதம் இதழ்-09 சஞ்சிகை வெளியீடும் வெள்ளிக்கிழமை (25.10.2025) முற்பகல்- 11.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்  கல்லூரி அதிபர் திருமதி சு.சீனிவாசகம் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் ஞான.திருக்கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆசிரியர்களான திருமதி.நி. தெய்வீகலிங்கம், திருமதி.ய.பகீரதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இணுவை இந்துக் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதிய உறுப்பினர் திருமதி. சோ.சிவசக்தி, இணுவையூர் முருகஜீவ அறக்கட்டளையின் ஸ்தாபகர் மு.புவீஸ்வரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.