யாழில் இன்றும் சில பகுதிகளில் மின்தடை!

மின்மாற்றிகளில் இடம்பெறும் திருத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக யாழ் வலிகாமம் மேற்குப் பிரதேசத்துக்கு  உட்பட்ட சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30.10.2025) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர். 

இதற்கமைய, வட்டு வடக்கு மற்றும் வட்டு மேற்கு, சங்கரத்தை, சித்தங்கேணி, அராலி வடக்கின் ஒரு பகுதி, துணைவியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.