பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சனிக்கிழமை (01.11.2025) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பொதுமக்களுக்கான விசேட அறிவித்தலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

