நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் ராம் சந்திர பௌடேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் இம்மாதம்-12 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது.
அவருக்குப் பதிலாக அடுத்த ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நேற்று வியாழக்கிழமை (09.03.2023) இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாளக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டிருந்தார். அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் தலைமையிலான கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா்.
இதில், 64.13 வீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக அவா் எதிர்வரும்-12 ஆம் திகதி பொறுப்பேற்க உள்ளார்.