அடுத்த மாதம் குறைகிறது எரிபொருள் விலை!


அடுத்த மாதம் முதல் வாரமாகும் போது எரிபொருள் விலை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது எரிபொருளைக் கொண்டு வருவதற்கான செலவுகளும் குறைவடையும். 

எரிபொருட்களின் விலை குறையும் பட்சத்தில் பொருட்களின் விலைகளும் குறைவடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் குறிப்பிட்டார்.