திட்டமிட்ட திகதிகளில் அஞ்சல் வாக்களிப்பு நடைபெறாது!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை மார்ச்-28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிகளிலும் ஏப்ரல்-3 ஆம் திகதியும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

ஏப்ரல்-25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்புத் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளும். 

இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. இதன்போது இவ்வாறான தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.