தெல்லிப்பழையில் நாளை இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

யாழ்.தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (24.03.2023) பிற்பகல்-01 மணி முதல் மேற்படி பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி.இன்பமதி பாலசுந்தரம் தலைமையில் இடம்பெற உள்ள குறித்த நிகழ்வில் வலிகாமம் வலயப் பாடசாலை அபிவிருத்திப் பொறுப்பாளர் தி.உதயகுமார் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய ஓய்வுநிலையப் பாடசாலை அபிவிருத்திப் பொறுப்பாளர் திருமதி.க.மோகனசுந்தரம், தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் கு.திருச்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ஜே-229 துர்க்காபுரம் பகுதிக் கிராம அலுவலர் இ.இந்திரஜித், மேற்படி பாடசாலையின் பழைய மாணவர்களான திருமதி. ஜெ.சசிகரன், செ.குகநேசன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.              

மேற்படி விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.