மின்கட்டண உயர்வுக்கு எதிரான மேன்முறையீடு: உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானம்!


மின்கட்டண உயர்வை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் மின் கட்டணத்தைத்  திருத்தியமைக்கும் அமைச்சரவையின் அண்மைய முடிவு சட்டத்திற்கு எதிரானது எனத்  தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று புதன்கிழமை(22.03.2023) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட்-4 ஆம் திகதி பரிசீலிக்க நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

இந்த மேன்முறையீட்டு மனுவை மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை தாக்கல் செய்திருந்தது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை உள்ளிட்டோர் வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.