ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு


இன்று வியாழக்கிழமை(09.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோக் கிராம்  செத்தல் மிளகாய் 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒரு கிலோக் கிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 230 ரூபாவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒரு கிலோக் கிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு 339 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு கிலோக் கிராம் வெள்ளைச் சீனியின் விலை 11 ரூபாவால்  குறைக்கப்பட்டு 218 ரூபாவாக விற்பனை செய்யப்பட உள்ளது. 

ஒரு கிலோக் கிராம் உள்ளுர்ச் சிவப்பு அரிசியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 155  ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

உள்ளூர் நாட்டரிசி ஒரு கிலோக் கிராமின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு 188 ரூபாவிற்கும்,     ஒரு கிலோக் கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 129 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.