வடக்கிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளைக் கொண்டு செல்லத் தடை!

வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக வடக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வடைந்துள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.