யாழ்ப்பாணத்தில் நாடகமும் அரங்கியலும் முழுநாள் பயிற்சிப் பட்டறை

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் க.பொ.த  உயர்தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வு எதிர்வரும்-12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08.00 மணி தொடக்கம் மாலை-05.00 மணி வரை இல-286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள மேற்படி மன்றக் கலைத்தூதுக் கலையகத்தில் நடைபெறும்.

மேற்படி பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமைக்கு(10.03.2023) முன்பாகத் தமது பெயர் ,விபரங்களை யாழ்.திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு திருமறைக் கலாமன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 021 222 2393, 077 6393620 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.