பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகளில் 80 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 20 வீத சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சீனாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த சீருடைகளில் 70 வீதமானவை வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஐந்து மாகாணங்களில் 30 வீதமான சீருடைகள் 41 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கும், பிக்கு மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட உள்ளன.