இணுவில் பொதுநூலகத்தின் ஆண்டு நிறைவு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(09.04.2023) மாலை-03 மணியளவில் மேற்படி பொதுநூலக மண்டபத்தில் இணுவில் பொதுநூலகத் தலைவர் சி.புரந்தரா தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதி நூலகர் கலாநிதி.திருமதி.கல்பனா சந்திரசேகர், ஜே-188 இணுவில் தென்மேற்கு கிராம சேவகர் இ.றமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடாவிலிருந்து வருகை தந்துள்ள இ.சச்சிதானந்தம், ஐ.பரமேஸ்வரன், ஐ.திவாகரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த நிகழ்வில் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சதுரங்கம் மற்றும் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டிக்கான பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெறும்.
நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இணுவில் பொதுநூலக நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.