புன்னாலைக்கட்டுவனில் முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு

புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(09.04.2023) பிற்பகல்-02 மணி முதல் புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய முன்றலில் கணேச சனசமூக நிலையத் தலைவர் சி.செல்வஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற உள்ளது.  .  

குறித்த நிகழ்வில் வலிகாமம் வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கிருபானந்தன் பிரதம விருந்தினராகவும், உடுவில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.வினோதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு முன்பள்ளிச்  சிறார்களை ஊக்கப்படுத்துமாறு கணேச முன்பள்ளி மற்றும் கணேச சனசமூக நிலைய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.  

(செ.ரவிசாந்)