கோண்டாவிலில் நாளை மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு


துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர்.தம்பித்துரை  சிவராஜாவின் ஞாபகார்த்தமாக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் துர்க்கா விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(09.04.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை கோண்டாவில் மேற்கில் இயங்கி வரும் மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இடம்பெற உள்ளது.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உயிரைக் காப்பாற்றும் மகத்தான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0772345459 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)