யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தின் நான்காம் பங்குனித் திங்கள் உற்சவம் நாளை திங்கட்கிழமை(10.04.2023) சிறப்பாக இடம்பெற உள்ளது.
நாளை முற்பகல்-11 மணிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகும். பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கெளரி அம்பாள் வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.