உடுவில் பிரதேச செயலகமும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்தும் விற்பனைச் சந்தையும் கண்காட்சியும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(10.04.2023) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமைகளில்(11.04.2023) காலை-10 மணி தொடக்கம் சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபை முன்பாக இடம்பெற உள்ளது.
உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற உள்ள குறித்த நிகழ்வில் சமுர்த்தித் திணைக்கள யாழ்.மாவட்டப் பணிப்பாளர் சு.முரளீதரன் பிரதம விருந்தினராகவும், சமுர்த்தி திணைக்கள யாழ்.மாவட்டச் சிரேஷ்ட முகாமையாளர் ஆ.இரகுநாதன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி.தனஞ்சயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளமையால் அனைவரும் கலந்து கொண்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.