மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் தாவடி வேதவிநாயகர் வீதி உலா

யாழ்.தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் பத்தாம் திருவிழாவான திருமஞ்சப் பவனி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(07.03.2024) இரவு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.


மாலை-06.45 மணியளவில் வசந்தமண்டப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் உள்வீதியில் உலா வந்து பின்னர் ஆலயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த திருமஞ்சத்தில் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க இரவு-07.45 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சப் பவனி ஆரம்பமானது. திருமஞ்ச வீதி உலாவின் போது ஆலய வடக்கு வீதியில் சிறப்பு மேளக் கச்சேரியும் நடைபெற்றது.             

இதேவேளை, நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் திருமஞ்சப் பவனியில் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)