வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா நாளை செவ்வாய்க்கிழமை(11.04.2023) காலை-06 மணியளவில் வழுந்துப் பானை வைத்தலுடன் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து ஆலயச் சூழலில் அடியவர்கள் பொங்கல் பொங்கி வழிபாடு செய்து கொள்ள முடியும்.
நாளை நண்பகல்-12 மணிக்கு ஆலய மண்டபத்தில் விசேட அன்னதானம் வழங்கப்படும்.
இதேவேளை, அம்பாள் அடியார்கள் அனைவரும் வருகை தந்து துர்க்கையம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.