புத்தாண்டை முன்னிட்டுக் கைதிகளைச் சந்திக்க வாய்ப்பு!

 

தமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (13.04.2023) முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கைதிகளைச் சந்திக்கப் பிரவேசிக்கும் உறவினர்கள் ஒருவருக்குப் போதுமான உணவுப் பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வர முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.