கோண்டாவிலில் சிறுவர்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்

சிறகுகள் அமையம் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் சிறுவர்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்புக்கள் கடந்த சனிக்கிழமை (08.04.2023) பலாலி வீதி, யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது.  

குறித்த பயிற்சி வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

ஆரம்ப நாள் வகுப்புக்களில் 33 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். சதுரங்கப் பயிற்சியாளர்களாக சிறகுகள் அமையச் செயற்பாட்டாளர்கள் தன்னார்வலர்களாகச்  செயலாற்ற முன் வந்துள்ளனர்.

இதேவேளை, காரைநகர், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா ஆகிய பகுதிகளிலும் சிறுவர்களுக்கான சதுரங்கப்  பயிற்சி வகுப்புக்களைச் சிறகுகள் அமையம் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து விரைவில் நடாத்த உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.