கீரிமலை கருகம்பனையில் நாளை சித்திரை விளையாட்டு விழா

கருகம்பனைப் பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் சித்திரை விளையாட்டு விழா நாளை வியாழக்கிழமை(13.04.2023) பிற்பகல்-02 மணியளவில் கீரிமலை கருகம்பனை மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.  

சிறுவர்களுக்கான விளையாட்டு  நிகழ்ச்சிகள், வினோத உடை, சறுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், தலையணைச் சண்டை ஆகிய விளையாட்டு நிகழ்வுகளும், பிரபல பாடகர்களுடன் சண்டிலிப்பாய் சண் பிறதேர்ஸின் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நிகழ்வில் வான வேடிக்கைகள், நடன நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.  

மேற்படி விளையாட்டு விழா நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.