சுதுமலையில் நாளை சித்திரைப் புதுவருடச் சிறப்பு வழிபாடு

சுதுமலை திருலிங்கேச்சரத்து  மரகதவல்லித் தாயார் உடனாய கயிலைநாதருக்கு நாளை  வெள்ளிக்கிழமை(14.04.2023) பிற்பகல்-02.03 மணியளவில் சித்திரைப் புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில் திருக்குடத் திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடுகளும் இடம்பெறும்.

அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு திருவருளைப் பெற்றுய்யுமாறு மேற்படி ஆலயத் தர்மகர்த்தா கேட்டுக் கொண்டுள்ளார்