ஆசிரியர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராத காரணத்தால் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சுமார் ஐம்பது நாட்களாகத் தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்-5000 ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைந்துள்ளமையால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதிலும் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.