இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா, சீனி மற்றும் பருப்பு ஆகிய மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 230 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 210 ரூபாவாகவும், 220 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் விலை 200 ரூபாவாகவும், 340 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ பருப்பின் விலை 310 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.