யாழில் நாளை திருமுறை விழா

யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் திருமுறை விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(02.04.2023) மாலை-04 மணி முதல் பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள பேரவையின் நடராஜர் மண்டபத்தில் இந்துசமயப் பேரவையின் தலைவர் ஈசான.சிவ சக்திகிரீவன் தலைமையில் இடம்பெற உள்ளது.        

ஆசி உரைகள், சிறப்பு உரைகளைத் தொடர்ந்து இசைக்கலைமணி சிவஸ்ரீ விஸ்வப் பிரசன்ன சிவாச்சாரியார் குழுவினரின் பண்ணிசைக் கச்சேரியும், அதனைத் தொடர்ந்து கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.