யாழில் இலவச புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப் பட்டறை
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச் சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான இலவச புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப் பட்டறை நூலக நிறுவனத்தால் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிப் பட்டறை நாளை ஞாயிற்றுக்கிழமை(02.04.2023) காலை-9.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை இல-55, சோமசுந்தரம் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.    

குறித்த பயிற்சிப் பட்டறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் துறையின்   விரிவுரையாளர் சுரேந்திரகுமார் கனகலிங்கம் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்குவார்.  

புகைப்பட ஆவணமாக்கலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களைக் குறித்த பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நூலக நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 0212231292, 0778983285 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் நூலக நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 (செ.ரவிசாந்)