ஊரெழு பூரண நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(01.04.2023) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஊரெழு கலைவாணி முன்பள்ளி வீதியில் அமைந்துள்ள மேற்படி நிலையத்தில் இடம்பெற உள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், குருதிக் கொடை வழங்க ஆர்வமுள்ளவர்கள் 0779116324, 0777163482 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.