பெரியபுலம் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

யாழ். பெரியபுலம் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(31.03.2023) பிற்பகல்-01.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் மைதானத்தில் வித்தியாலய அதிபர் ந.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வில் மேற்படி பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியரும், பகுதித் தலைவருமான திருமதி.கோ.கருணானந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.