வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு


தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை(04.04.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இதற்கமைய சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், மோட்டார்ச் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும்,  கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றர் வரையும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும், லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும், விசேட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கைகளை மேலும் எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.