சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாளின் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

சண்டிலிப்பாய் சீரணி ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நேற்றுப் புதன்கிழமை(19.04.2023) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் 18 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெற உள்ளதுடன் அடுத்த மாதம்-04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலயத் தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவத்தை நடாத்துவதற்கான அனுமதி உரிய தரப்பினரால் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தும், தடையின்றி மஹோற்சவத்தை நடாத்துமாறு வலியுறுத்தியும் மேற்படி ஆலய அடியவர்களால் கடந்த-12 ஆம் திகதி புதன்கிழமை மேற்படி ஆலயத்தின் முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)