பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைப் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.