40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரம் ரத்து!


QR குறியீட்டு முறைமையிலிருந்து விலகிச் செயற்பட்ட 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் எட்டு வாரங்களுக்கான எரிபொருள் விநியோகம், சுத்திகரிப்பு, பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.