கைதடி கௌரி அம்பாள் கட்டடப் பணிகளுக்கு நிதி கையளிப்பு

யாழ்.கைதடி ஶ்ரீ கௌரி அம்பாள் ஆலயக் கட்டடப் பணிகளுக்காக ஒரு லட்சம் ரூபா நிதி இன்று  புதன்கிழமை(05.04.2023) சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை-04.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்   குறித்த நிதியை மேற்படி ஆலயப் பிரதம குருவிடம் நேரடியாகச் சென்று கையளித்தார்.