கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் பங்குனி உத்தர மஹோற்சவத்தின் பூங்காவனத் திருவிழாவை முன்னிட்டு அருணாவின் பக்தி இசைச் சங்கமம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(06.04.2023) இரவு-08 மணிக்கு மேற்படி ஆலய முன்றலில் இடம்பெற உள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.