யாழ். குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான விசேட கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (08.04.2023) மாலை-04 மணிக்கு மேற்படி ஆலய முன்றலில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் திருவிழா உபயங்கள் தொடர்பிலும் மற்றும் பல விடயங்கள் தொடர்பிலும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளமையால் அனைத்து உபயகாரர்களையும், நிர்வாக அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.