சுன்னாகத்தில் 25 சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டுப் புத்தாடைகள் கையளிப்பு

இரவு, பகல், மழை, வெயில் பாராமல் 24 மணி நேரமும் சேவை செய்யும் வலிகாமம் தெற்குப் பிரதேசசபையின் 25 சுகாதாரத் தொழிலாளர்களுக்கும்  தீபாவளித் திருநாளை முன்னிட்டுப் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் வைத்துப் புத்தாடைகள் கையளிக்கப்பட்டுள்ளன. 

இணுவில் தெற்கை சேர்ந்த செல்லத்துரை பாலசுப்பிரமணியத்தின் நிதிப் பங்களிப்பில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் புத்தாடைகள் கையளிக்கப்பட்டன.