உணவுப் பொதி, கொத்து ரொட்டி விலைகளும் குறைப்பு!

இன்று புதன்கிழமை(05.04..20223) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  

இதன்படி, உணவுப்பொதி, கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 20 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேநீர்க் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.