பிறப்புச் சான்றிதழ் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய முறைமையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதன்படி, கிராம சேவகர் பிரிவொன்றில் நிரந்தர முகவரியுடனான பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இதற்கமைவான சுற்றுநிரூபம் அனைத்துப் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.