தந்தை செல்வாவின் 46 ஆவது ஆண்டு அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நாளை

ஈழத்துக் காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் 46 ஆவது ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும், நினைவுப் பேருரையும் நிகழ்வு நாளை புதன்கிழமை(26.04.2023) காலை-09.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை காலை-10 மணியளவில் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வில் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை வரலாற்றில் தந்தை செல்வா சாதித்தவைகள் எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ.நவரத்தினம் அடிகளார் நினைவுப் பேருரை ஆற்றுவார்.