எதிர்வரும் மே மாதம்-20 ஆம் திகதிக்குப் பின்னர் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க எதிர்வு கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது மழை கிடைக்கப் பெறும் நிலையில் வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை(26.04.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும், இன்னும் வெப்பநிலை நீங்கவில்லை. மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால் வெப்பநிலை அடுத்த மாதம்-20 ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.