உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிடில் இதுதொடர்பில் தமது அமைச்சிற்குத் தெரியப்படுத்துமாறு உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படைச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவை உரிய வகையில் வழங்கப்படவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பளம் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.