சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(02.05.2023) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொது அறையில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.