எரிபொருள் விலைகள் குறைப்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை(30.04.2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுப் புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுப் புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 310 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டு 330 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.