வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய அன்னாபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை காலை-08 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகித் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் உள்வீதி எழுந்தருள்வார். தொடர்ந்து மகேஸ்வர பூசையுடன் அன்னதானமும் நடைபெறும்.


