யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அங்கமாக எங்கட புத்தகங்கள் அமைப்பினர் நடாத்தும் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் இன்று வெள்ளிக்கிழமை (23.10.2026) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) வரை யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மூன்று நாட்களும் காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை இடம்பெறவுள்ள கண்காட்சி நிகழ்வின் ஒரு கட்டமாகப் புத்தக விற்பனையும் இடம்பெறும். இதன்போது அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 வீத விலைக்கழிவு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


