சர்வதேச நாணய நிதியப் பணிக்குழுவின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியப் பணிக்குழுவின் பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை(11.05.2023) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இன்று முதல் எதிர்வரும்-23 ஆம் திகதி வரை குறித்த பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசனும் குறித்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் முதலாவது மீளாய்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வழமையான ஆலோசனைகளின் ஓர் அங்கமாக சர்வதேச நாணய நிதியப் பணிக் குழுவின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியப் பணிக் குழுவின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச்  சந்தித்துக் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.