வில்லூன்றி வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை(10.05.2023) காலை-8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும். 

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 17 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் வேட்டைத் திருவிழாவும், 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-08.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.(செ.ரவிசாந்)